திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு சட்டங்கள், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள், குழந்தைகள் நலக்குழு தொடர்பான வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி கூர்ந்தாய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், ஜெயபிரபா, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், இளைஞர் நீதிக்குழுமம் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.