மத்திய அரசு வழங்கியு்ளள பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று (டிச., 13) செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தளவு மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தயாராக உள்ளது. மழை வெள்ள பாதிப்புக்கு பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி, போதுமானதாக இல்லை. தென் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி வழங்க ஊடங்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.