திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அனைத்து வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் கடைவீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து வர்த்தகர்கள் சங்க தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் வியாபார கடைகளுக்கு வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்த மத்திய அரசை கண்டித்தும் முழுமையாக ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து வேடசந்தூர் பகுதி முழுவதும் பத்து பன்னிரண்டு 2024 செவ்வாய்க்கிழமை முழு கடை அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வியாபாரிகளும் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என பொதுச்செயலாளர் ராஜா மற்றும் அனைத்து வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.