வேடசந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. வழக்கறிஞர்கள் தங்களது வழக்காடிகளின் தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தின் சார்பில் சார்பு நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களின் வழக்கு விவரங்களை ஆன்லைன் மூலம் வழக்கறிஞர்கள் பதிவேற்றம் செய்வதற்காக இ சேவை மையம் அமைக்கப்பட்டது. சனிக்கிழமை காலை பத்து முப்பது மணி அளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி சரவணகுமார் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி இ சேவை மையத்தை திறந்து வைத்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வாஞ்சிநாதன் முன்னிலை வகித்தார். வக்கீல் சங்க செயலாளர் பாலமுருகன், தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் கந்தசாமி, துணைச் செயலாளர் பகவத்சிங், பொருளாளர் பாண்டியராஜன், வழக்கறிஞர்கள் கணேஷ்சுந்தரம், சுகுமார், ராஜ்குமார், முருகேசன், ஜெயராமன், தங்கவேல் முனியப்பன், செல்வகுமார், பிரியதர்ஷினி, சுப்புலட்சுமி, கமலம், ஜெயந்தி, பாண்டீஸ்வரி, ஜெயப்பிரியா, கனகரசி, மற்றும் வக்கீல்கள் கோர்ட் ஊழியர்கள், கோர்ட் போலீசார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.