திண்டுக்கல் மாவட்டத்திலேயே வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகில் மட்டுமே அம்பேத்கரின் முழு உருவச்சிலை உள்ளது. இந்த சிலையை நிறுவிய தலித்சிவா இளைஞர் பாசறை தமிழ்நாடு சார்பாக ஒவ்வொரு வருடமும் முதல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அதன்படி அவரது உருவ சிலைக்கு தலித்சிவா இளைஞர் பாசறை தமிழ்நாடு நிறுவனர் ஸ்டாலின்தேவி தலைமையில் சட்டக் கல்லூரி மாணவர் கவியரசன், மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன், மற்றும் குணா, வேல்முருகன் முனியாண்டி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு முதல் மாலையை அணிவித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் வட்டார தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் எஸ் சி, எஸ் டி பிரிவு மாவட்ட தலைவர் குப்புசாமி மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவு வேடசந்தூர் நிர்வாகிகள் ராஜா, தங்கவேல் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிபாளையம் சாமிநாதன், வட்டாரத் தலைவர் பகவான், நகரத் தலைவர் ஜாபர்அலி, மாவட்ட பொறுப்பாளர்கள் பெரியசாமி, இராபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.