திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தவிழாவின் 10ஆம் நாள் விழாவான இன்று (டிச.13) அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில், கொட்டும் மழையில் மகா தீபம் ஏற்றிவைக்கப்படும் கொப்பரை, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.