வேடசந்தூர்: வாக்காளராக பதிவு செய்ய விழிப்புணர்வு பிரச்சாரம்

79பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் வேடசந்தூர் வட்டாட்சியர் சார்பாக நீங்கள் வாக்காளராக பதிவு செய்வதற்கு அரிய வாய்ப்பு எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சார நாடகம் நடைபெற்றது. மேலும் வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பெயர் பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், பெயரை நீக்குதல், வாக்காளர் பெயரை சேர்க்க ஆட்சேபனை தெரிவித்தல், குடியிருப்பு மாற்றியதற்கான விபரம் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான பணிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பாக வேடசந்தூர் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சியின் சார்பில் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் நாடகம், நடனம், மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி