வேடசந்தூர் - Vedasandur

வேடசந்தூர்: குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்

வேடசந்தூர்: குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்

ஆத்தூர், தாடிக்கொம்பு, வேடசந்தூர் வழியாகச் செல்லும் குடகனாற்றின் குறுக்கே, அழகாபுரியில் குடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது. 27 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 26 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மற்றும் இன்றும் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு 600 கன அடி நீர் வரத்து உள்ளது. எனவே அணைக்கு கூடுதலாக வரும், 600 கன அடி நீர், உபரி நீராக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, அப்படியே 600 கன அடி நீரும் குடகனாற்றில் திறந்து விடப்படுவதாக, குடகனாறு அணையின் உதவி பொறியாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், ஆற்றங்கரை ஓர பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా