TNPSC மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்களின் நலன் கருதி இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக TNPSC கூறியுள்ளது. அதன்படி, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில் முதல்நிலை தேர்வு 200 கேள்விகளை கொண்டு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, பொது அறிவு - 75, திறனறிவும் மனக்கணக்கு நுன்னறிவும் - 25 மற்றும் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் - 100 கேள்விகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.