கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சில மாதங்களாகவே வளர்ப்பு நாய்கள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிறுத்தை ஒன்று மோத்தேபாளையத்தில் மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு இருந்த நாயை கவ்விச் சென்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்பகுதியினர் வீடுகளில் இருந்து வெளியேற அச்சப்படுகின்றனர்.