தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேவுள்ள பெரியசாமி அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கிருந்த சுமார் 40 பக்தர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். வெள்ளத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே சென்றதால் செய்வதறியாமல் இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, இருபுறமும் கயிறு கட்டி. அங்கிருந்த மக்களை பத்திரமாக மீட்டனர்.