நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இன்று (டிச., 14) நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மீண்டும் தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். தொடர் கனமழை காரணமாக நேற்றைய தினமும் மனோன்மணியம் பல்கலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனிடையே இன்றும் நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.