கோட்டகுப்பம் அருகே கணவர் மாயம்.. மனைவி புகார்
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடி எம். ஜி. ஆர். , நகரைச் சேர்ந்தவர் அண்ணா துரை, (54) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த அவர், மனநலம் பாதிக்கப்பட்டார். கடந்த மாதம் 20ம் தேதி அண்ணாதுரை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி அம்சவேணி, அளித்த புகாரின் பேரில், நேற்று(அக்.6) கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.