விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில், கடந்த 2008ம் ஆண்டு முதல் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, 15வது ஆண்டாக, மாரத்தான் ஓட்டம் நடந்தது. மனித ஒற்றுமை, உடல் வலிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி நடந்த மாரத்தான் ஓட்டத்தில், வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விசிட்டர் சென்டர் வாசலில் துவங்கிய ஓட்டத்தை ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி சீத்தாராமன் துவக்கி வைத்தார். ஆரோவில்லை சுற்றி, 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ., என, நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் 10 கி.மீ. ஓட்டத்தில் பார்வையற்றவர்கள் 10 பேர் பங்கேற்று அசத்தினர். சென்னையில் இருந்து எஸ்.பி. ஷேகர் தேஷ்முக், ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.