வானூர்: அரசு கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

53பார்த்தது
வானூர் அரசு கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கல்லூரியை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கடந்த ஆண்டு திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் வில்லியம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் ஆலோசனையின்படியும் அனைத்து துறை மாணவ மாணவிகளும் மற்றும் பேராசிரியர்களும் உற்சாகத்துடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். 

முன்னதாக மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக உறி அடித்தல், கயிறு இழுத்தல், ரங்கோலி வரைதல், பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, நீர் நிரப்புதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பொங்கல் விழா கொண்டாட்டத்தில் இக்கல்லூரி மாணவர்களின் கேரளச் செண்டை மேளம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்புடைய செய்தி