விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் பட்டணம் கூட்ரோடு அருகே ரோஷனை காவல் நிலைய ஆய்வாளர் தரணேஸ்வரி, உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் மற்றும் காவலர்கள் தலைமையில் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் காரில் வந்த ஜோதி ராஜ்( 32), தனசேகரன் வயது (42) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்து மேலும் சுமார் 250 கிலோ எடை கொண்ட விமல், ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் வைத்திருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.