திருவாரூர் மாவட்டம், திருகற்காவூரை சேர்ந்தவர் சிவக்குமார், (49); லாரி டிரைவர். இவர், விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையத்தில் உள்ள ஒரு பருத்தி குடோனுக்கு லாரியில் லோடு ஏற்ற வந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லாரியிலேயே இறந்தார். புகாரின்பேரில், வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.