விழுப்புரம் மாவட்டம், சேந்தனுார் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 40; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 3ம் தேதி, அவரது வீட்டுக்கு அருகே செல்லும் மலட்டாறு வெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் நேற்று (டிசம்பர் 09) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.