வளவனுார் அருகே சாலையில் நின்றிருந்த லாரியில் பேட்டரிகளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வளவனுார் அருகே ஏ.கே. குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், (47); இவர், தனது லாரியை கடந்த 7ம் தேதி சாலை அகரம் பகுதியில் நிறுத்திவிட்டுச் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது லாரியில் இருந்த இரு பேட்டரிகள் திருடுபோனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம். புகாரின் பேரில் வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.