விழுப்புரம்: கல்லால் தாக்கப்பட்டவர் சாவு - கொலை வழக்காக மாற்றம்

59பார்த்தது
விழுப்புரம்: கல்லால் தாக்கப்பட்டவர் சாவு - கொலை வழக்காக மாற்றம்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த கலித்திரம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (45); பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 1ம் தேதி இரவு 11:00 மணியளவில், கலித்திரம்பட்டு - வி.நெற்குணம் சாலையில், தலையில் பலத்த காயத்துடன் கிடந்தார். அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதுகுறித்து, கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கலித்திரம்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் பாரதிதாசன் (22) என்பவர், தகராறில், பச்சையப்பனின் தலையில் கல்லால் தாக்கியது தெரியவந்தது. பாரதிதாசனை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சையப்பன் நேற்று இறந்தார். அதைத்தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காகப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி