விழுப்புரம் குருசாமி தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 49), இவர் பாட்டுக்கச்சேரி, இசைக்குழு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த சிலம்பு உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து, செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிலம்பு உள்ளிட்ட 4 பேர் மீதும் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.