விழுப்புரம் கே. கே. சாலை பகுதியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக் விழுப்புரம் ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கலிவர தன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்து அவ ரிடமிருந்த 3 செல்போன்கள், ரூ. 300 மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை பறிமு தல் செய்தனர். மேலும் இது தொடர்பாக செஞ்சி அருகே அப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.