தங்கையுடன் நடனமாடிய வாலிபரை அண்ணன் பளார் என அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்கையுடன் மற்றொரு வாலிபர் ஜோடி சேர்ந்து நடனமாடியதால் ஆத்திரமடைந்த அண்ணன் திடீரென மணமேடைக்கு வந்து, தனது தங்கையை கோபத்துடன் வெளியேறச் சொல்கிறார். அடுத்த கணமே தங்கையுடன் ஜோடியாக ஆட்டம்போட்ட வாலிபரின் கன்னத்தில் பளார் என அறைவிடுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அந்த வாலிபர் சரிந்து விழுந்தார். இதனால், திருமண நிகழ்ச்சியில் சிறிது பரபரப்பு நிலவியது.