திருக்கோவிலூர்: பார்க்கவகுல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

65பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்துள்ள மனம்பூண்டி ஊராட்சியில் உள்ள விழுப்புரம் மத்திய மாவட்ட ஐஜேகே அலுவலகத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட ஐஜேகே மாவட்ட தலைவரும், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளர் செந்தில்குமார் தலைமையில், விழுப்புரம் மண்டல பார்க்கவகுல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் விழுப்புரம் மண்டல புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து அதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் கோதண்டபாணி, விழுப்புரம் மாவட்ட தலைவர் தங்கவேல் உடையார், மாவட்டச் செயலாளர் செல்வம், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பொன்முடி, இலக்கிய அணி மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், தெய்வீகன் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் குருமூர்த்தி, மாவட்ட பொருளாளர்கள் குணசேகரன், கார்த்திக், மாவட்ட மாணவரணி தலைவர் பிரசாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி