வானூர் தொகுதியில் தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், வானுார் தொகுதி தே. மு. தி. க. , பொதுக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நேற்று (செப் 28) நடந்தது. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், தணிகைவேல், பிரகாஷ், முருகன், கோட்டக்குப்பம் நகர செயலாளர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பணிக்குழு செயலாளர் மாதவன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ஏழை, எளியோர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மாநில கேப்டன் மன்ற துணைச் செயலாளர் ராஜசந்திர சேகர், மாவட்ட அவைத்தலைவர் கணபதி, பொருளாளர் தயாநிதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், சுந்தரேசன், சூடாமணி, பாலாஜி. பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், பிரகாஷ், விஜயசங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், சேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் அருள் நன்றி கூறினார்.