
காட்பாடி: தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது கணவர் சுப்பிரமணி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு யுவராஜ் (வயது 20), விஜயகுமார் (16) என இரு மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி இறந்தபின் விஜயலட்சுமி கூலி வேலை செய்து மகன்களை வளர்த்து வந்தார். மூத்த மகன் யுவராஜ் பெங்களூருவில் ஏ.சி. மெக்கானிக்கலாக வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஊரில் நடந்த திருவிழாவிற்காக விடுமுறையில் வந்திருந்தார். இறந்த நிலையில் நேற்று (மார்ச் 13) இரவு வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரயிலில் அடிபட்ட யுவராஜ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அங்கு சென்று ரயிலில் அடிபட்டு இறந்த யுவராஜின் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.