வருமானத்திற்கு அதிகமாக சொத்து - சார்பதிவாளர் மீது வழக்கு

78பார்த்தது
வேலூர் அடுத்த வல்லம் கிராமம் கந்தசாமிநகரை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவர் தற்போது நித்தியானந்தம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பதிவுத்துறை அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நித்தியானந்தம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

அதைத்தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது ₹13 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப்பணம். 80 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ₹12 லட்சம் வீட்டின் அருகே மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து நித்தியானந்தம் மற்றும் அவருடைய மனைவி தனியார் பள்ளி ஆசிரியை ஜெயசித்ரா ஆகியோரின் வங்கிக்கணக்கு, அசையும், அசையாத சொத்துகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இதில் நித்தியானந்தம், ஜெயசித்ரா ஆகியோர் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜூன் 20ம் தேதி வரை வருமானத்துக்கு அதிகமாக 30 லட்சத்துக்கு சொத்து சேர்த்தது தெரிய வந்தது. இதையடுத்து நித்தியானந்தம், ஜெயசித்ரா மீது போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி