வேலூர்: வீட்டில் அரிய வகையான ஆந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்

55பார்த்தது
வேலூர்: வீட்டில் அரிய வகையான ஆந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் 10வது கிழக்கு குறுக்கு சாலையில் செல்லப்பா என்பவர் வீட்டில் உள்ள மரத்தில் நேற்று(அக்.5) மாலையில் அரிய வகை ஆந்தை ஒன்று இருந்ததை கண்ட செல்லப்பா அதுவாக சென்று விடும் என்று நினைத்தார். ஆனால் இந்த ஆந்தை இன்று(அக்.6) காலை அதே மரத்தில் அமர்ந்து இருந்ததை கண்ட செல்லப்பா காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செல்லப்பா வீட்டிற்கு விரைந்து வந்து மரத்திலிருந்த அரிய வகை ஆந்தையை பத்திரமாக மீட்டு கிறிஸ்டியான் பேட்டை காப்பு காட்டில் விட்டனர். இந்த ஆந்தையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியப்புடன் கண்டனர்.

தொடர்புடைய செய்தி