வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி நகராட்சி துவக்க பள்ளியில் கடந்த ஜூன் மாதம் தன் பெயர் பகவதிராஜன் என்றும், தனது மனைவி பெயர் அனுஷாமயில் என்றும் இவர்களின் மகளை 5ம் வகுப்பிலும் மகனை 4ம் வகுப்பிலும் பள்ளியில் சேர்த்துள்ளனர். அப்போது தான் காவல் துறையில் பணி புரிவதாக பகவதிராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த பள்ளியில் மாணவர்களின் கற்பிக்கும் முறை நன்றாக உள்ளதாக கேள்விப்பட்டேன் , இந்த பள்ளியில் எனது மகன் மகளை சேர்க்கிறேன் என கூறியுள்ளார்
மேலும் என்னிடம் கோடி கணக்கில் பணம் உள்ளது , குறைந்த வட்டிக்கு பணம் கொடுக்கிறேன் என நகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ஆசிரியை வட்டிக்கு பணம் கொடுக்க முன் பணமாக , 3 லட்சமும் 5 சவரன் தங்க நகையும் பகவதி ராஜனிடம் கொடுத்துள்ளார். அதேபோல் குடியாத்தம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி பெண் ஒருவரிடம் வட்டிக்கு பணம் தருவதாகவும் கூறி முன்பணம் வட்டியாக ரூபாய் 5 லட்சத்தை வாங்கியுள்ளார். பின்னர் அவரின் செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகம் அடைந்த இவர்கள் , அவர்களுக்கு தெரிந்த போலீசாரிடம் விசாரணை செய்ததில் அவர் போலி என தெரியவந்துள்ளது. இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் புகார் அளித்தனர். இது குறித்து குடியாத்தம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.