காட்பாடி - Katpadi

காட்பாடி அருகே புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது

காட்பாடி அருகே புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது

காட்பாடி தாலுகா பொன்னை அருகே கே. என். பாளையம் மாநில எல்லைசோத னைச்சாவடியில் ஆந்திரா மற்றும் கர்நா டக மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்து வதாக போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் பொன்னை சப்-இன்ஸ் பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் சோதனைச்சாவடியில் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் 6 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த ராணிப்பேட்டை மாவட்டம் கரடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் 6 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా