வேலூர்: 6000 மாணவர்கள் பங்கேற்ற உலக சாதனை நடன விழிப்புணர்வு

57பார்த்தது
வேலூர் காட்பாடி அரசு விளையாட்டு மைதானத்தில் ஜனசிக்ஷா கலாலயம் அறக்கட்டளை சார்பில் இனி ஒரு விதி செய்வோம் என்ற தலைப்பில், பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்முறை, போதைப் பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்புகள் குறித்து பள்ளி மாணவ மாணவியர்களின் உலக சாதனை நடன விழிப்புணர்வு நிகழ்வு இன்று((அக்.03) நடைபெற்றது.

நிகழ்வில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே ஆப்பு ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தனர். நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற சுமார் 6000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பரதம், சிலம்பாட்டம், கும்மியாட்டம் ஆகிய நடனங்களை தொடர்ச்சியாக 34 நிமிடங்கள் 35 வினாடிகள் ஆடி விழிப்புணர்வு செய்து உலக சாதனை நிகழ்த்தினர். இந்த நிகழ்வில் சிறப்பாக நடனமாடிய மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி