பணம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது!

52பார்த்தது
வேலூர் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் சரவணன். அரசு பள்ளி ஆசிரியரான இவர் திருச்சி மாவட்டம் உறையூர் அருகே உள்ள தில்லை நகர் அரசு நிதி உதவி பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் நீலகண்டன் தொழில் தொடங்க உள்ளதாகவும், தாங்கள் அளிக்கும் பணத்திற்கு இரட்டிப்பாக திருப்பித் தரப்படும் என கூறி தன்னிடம் 35 லட்சம் பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், குற்றப்பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அரசு பள்ளி ஆசிரியர் நீலகண்டன் மீதான புகார் உறுதியானது. இதையடுத்து வேலூர் குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் வைத்து நீலகண்டனை இன்று கைது செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி