அரக்கோணம் - Arakkonam

அரக்கோணத்தில் இரு சக்கர வாகனங்கள் திருடிய வாலிபர் கைது

அரக்கோணத்தில் இரு சக்கர வாகனங்கள் திருடிய வாலிபர் கைது

அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்கவும் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் அரக்கோணம் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் நகரின் பல பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று (டிசம்பர் 26) அரக்கோணம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகே உள்ள பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த கேசவன் (வயது 27) என்பதும் மோட்டார் சைக்கிள் திருட முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా