அரக்கோணம் காலிவாரி கண்டிகையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வீடு கட்டி வசித்து வருபவர்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து அகற்ற கால அவகாசம் முடிந்த நிலையில் இன்று அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர் சித்திக், வட்டாட்சியர் ஸ்ரீதேவி மற்றும் போலீசார் முன்னிலையில் வீடுகள் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.