திருவண்ணாமலை: செங்கத்தை சேர்ந்தவர் விஜய் (28). இவருக்கும் பெண் காவலர் சுகன்யா (25) என்பவருக்கும் கடந்த மார்ச்சில் திருமணம் நடைபெற்றது. மனைவி அடிக்கடி போனில் பேசி வந்ததால் சந்தேகமடைந்த விஜய் அவருடன் சண்டை போட்டிருக்கிறார். இது தொடர்பான பிரச்னையில் விஜய் கடந்த வியாழன் (டிச. 26) தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் விஜயின் தாயார், தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்துள்ள புகாரையடுத்து போலீஸ் விசாரிக்கிறது.