திருப்பத்தூர்: கொடி நாளில் ரூ.19 லட்சம் வசூல் செய்த நபருக்கு பாராட்டு

82பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் தேநீர் விருது நிகழ்ச்சியில் மேதகு ஆளுநர் பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் தர்ப்பமராஜ் 2021 ஆண்டில் கொடிநாள் ரூபாய் 19 லட்சம் வசூல் செய்த கரூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்து தற்போழுது திருப்பத்தூர் மாவட்டத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் மூக்கையாவிற்கு வழங்கினார். 

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் சதீஷ்குமார், வேலூர் மாவட்ட படைவீரன் நல அமைப்பாளர் ரவிச்சந்திரன், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி