மறைந்த தேமுதிக தலைவர் 'கேப்டன்' விஜயகாந்தின் நினைவு தினம் இன்று (டிச. 28) அனுசரிக்கப்படும் நிலையில் இன்றைய நாளை குரு பூஜை தினமாக கடைபிடிக்க அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், விஜயகாந்த் நினைவிடத்தில் மொட்டை அடித்துக்கொண்டனர்.