காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் சிலர் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதையடுத்து வரி செலுத்தக்கோரி பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் வரி செலுத்தவில்லை. அதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் செல்லியம்மன் கோவில் தெரு, குள்ளரா மசாமி தெரு, கவரைத்தெரு, திருநீலகண்டர் தெரு, போலீஸ்லைன் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பை பேரூராட்சி ஊழியர்கள் துண்டித்தனர். அப்போது இளநிலை உதவியாளர்கள் சுமதி, நாகேஸ்வரி, வரிதண்டலர் கோமதி, துப்பரவு பணி மேற்பார்வையாளர் பன்னீர், அலுவலக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.