
ஆற்காட்டில் ஆலமரத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பசுமைத்தாயகம் சார்பில் இன்று அங்குள்ள ஆலமரத்துக்கு பாமகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். வீட்டில் இறந்து விட்டால் ஒப்பாரி வைப்பது போன்று பெண்கள் ஒப்பாரி வைத்தனர். மரங்களை வெட்டாமல் வேறு இடத்தில் நடவு செய்ய வேண்டும் என்றனர்.