மன்மோகன் சிங் உடல் இன்று அரசு மரியாதைப்படி நல்லடக்கம்

75பார்த்தது
மன்மோகன் சிங் உடல் இன்று அரசு மரியாதைப்படி நல்லடக்கம்
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல் இன்று (டிச.28) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதைப்படி நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவு அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி