நடிகரும், தேமுதிக தலைவருமான மறைந்த ’கேப்டன்’ விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (டிச. 28) அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து, தொண்டர்கள் நினைவிடத்தில் குவிந்துள்ளனர். மேலும், தேமுதிக சார்பில் திட்டமிடப்பட்டிருந்த பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.