அரக்கோணம் ஜோதி நகர் திருத்தணி ரோட்டில் ரூ. 1 கோடி 20 லட்சத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன், நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது பொது பணி மேற்பார்வையாளர் பிரேம் சந்தர், சுகாதார அலுவலர் வெயில் முத்து மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். அதைத் தொடர்ந்து அரக்கோணம் தாலுகா செஸ் சங்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷின் மணல் ஓவிய காட்சியை நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி பார்வையிட்டார்.