தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான ‘தமிழ்நிலம்’ மென்பொருளில், விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இன்று (டிச.28) முதல் 31ஆம் தேதி மாலை 4 மணி வரை 4 நாட்கள் இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.