வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்காவில் கீழ் கொத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 200 ஆண்டுகளாக புரட்டாசி 3-ம் சனிக்கிழமை விரதத்தை புதுமையான முறையில் செய்கிறார்கள். இந்த ஊரில் உள்ள அனைவரும் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை காலையில் விரதத்தை தொடங்கி விடுகிறார்கள். ஊரில் உள்ள மேட்டுக்குடி வகையறாக்கள் அருகில் உள்ள 7000 அடி உயரமுள்ள ஜவ்வாது மலை தொடர்ச்சி ஈசன் மலை உச்சியில் சென்று அங்கு மாலை நெய் தீபம் ஏற்றுகிறார்கள்.
இந்த தீப ஒளியை பார்த்த உடன் கீழ் கொத்தூர் கிராம வாசிகள் தங்கள் ஊரில் உள்ள ராமர் கோயிலில் 1000 நெய் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுகின்றனர். பின்பு அங்கு தரப்படும் பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிக்கிறார்கள். 3-ம் சனியன்று பழமையான பாரம்பரியம் மாறாமல் பெருமாளின் புகழ் பாடி பக்தர்கள் பஜனை செய்தபடி ஊரை சுற்றி வருகிறார்கள்.
இந்த விரத முறை கடந்த 200 வருடங்களாக தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.