வேலூர் அடுத்த ஊசூர் அரசு பள்ளியில் கடந்த 20ம் தேதி இரு மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் திலீப் குமார் என்ற மாணவனை சக மாணவன் பிளேடால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவன் திலீப் குமார் அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் திலீப் குமாரை பிளேடால் வெட்டிய சக மாணவனை நி போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, "மீண்டும் இது போன்ற தவறான செயல்களை செய்யக்கூடாது என அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினார்".