தலைமையாசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

80பார்த்தது
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே வேலூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (செப்.,25) நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஒரு வருடமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களை சிறு, சிறு பிரச்சனைகளை காரணம் காட்டி தொடர்ச்சியாக பணியிட நீக்கம், பணியிட மாற்றம் செய்வதை கண்டித்து தலைமை ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் கல்வித்துறை அதிகாரிகளின் இது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து பள்ளிகளில் கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட உள்ளதாகவும் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி