
வேலூர்: குற்றச்செயலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்ச்செல்வன், எழிலரசன் ஆகிய இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று தமிழ்ச்செல்வன் எழிலரசன் ஆகியோர்களை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.