
ராணிப்பேட்டையில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் கிராமம் பத்மநாபன் நகர் பகுதியில் உள்ள ஒரு முள்வேலி மரத்தில் (70) வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தூக்கு மாட்டி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.