பெண்களுக்கு திரைப்பட இயக்குனர் கோபி நயினார் அட்வைஸ்!

50பார்த்தது
வேலூர் காட்பாடியில் ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளியின் சார்பில் கராத்தே போட்டிகளில் திறம்பட செயல்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (08. 09. 2024) நடந்தது.

நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு சாகசங்களை செய்து அசத்தினர். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் கோபி நாயனார் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "சுயமரியாதையை நமக்கு உருவாக்கித் தருவது நம்மிடம் உள்ள தன்னம்பிக்கை தான். சண்டையிடுவதற்கும் சமாதானத்திற்கும் மனம் தான் காரணமாக உள்ளது. ஆகையால் மனதை எப்போதும் தைரியத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். சமூகத்தில் உங்களை தனித்துவத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். தனித்துவம் தான் நமக்கு எப்போதும் உதவும். இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பெண் படிப்பில் சிறந்தவராக இருப்பதை விட சிறந்த சண்டை பயிற்சியாளராக இருப்பது தான் ரொம்ப முக்கியம், " என்று பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி