வேலூர் எம்பி நீதிமன்றத்தில் ஆஜர்!

57பார்த்தது
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை ரூ. 10. 57 கோடியைக் கைப்பற்றியது.

இது தொடர்பாக தொடர்பாக எம். பி கதிர் ஆனந்த், அவரின் ஆதரவாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய மூன்று பேர்மீதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 பிரிவு 125(ஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 171(இ), 171 பி(2) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் எம். பி கதிர் ஆனந்த் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சத்திய குமார் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி